Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»எகிறும் உரவிலை; விவசாயிகளை காக்க வேண்டும்-  மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கோரிக்கை
    அரசியல்

    எகிறும் உரவிலை; விவசாயிகளை காக்க வேண்டும்-  மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உர விலை உயர்வுவில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக, பொட்டாஷ் உரத்தின் விலை ரூ.1,850 இலிருந்து ரூ.2,250 ஆகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை ரூ.1,550 இலிருந்து ரூ.2,100 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் யூரியா, சல்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது உழவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

    ஏற்கனவே இயற்கை மாற்றங்கள், நீர் பற்றாக்குறை, தொழிலாளர் செலவு உயர்வு, மின்சார சிக்கல்கள், பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகள், தற்போது உர விலை உயர்வால் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

    உர விலை உயர்வால் ஒரு ஏக்கர் விவசாயத்திற்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக சிறு மற்றும் குறைந்த நிலம் கொண்ட விவசாயிகள் பயிரிட தயக்கம் காட்டக்கூடும். இது எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவு, சந்தை விலை உயர்வு மற்றும் உணவுப் பாதுகாப்பு சிக்கல்களையும் உருவாக்கும் அபாயம் உள்ளது.

    விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். எனவே விவசாயிகளை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாகும். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உடனடியாக உர விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும்,

    உரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கவும்,  -கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க  ஏற்பாடு  செய்யவும்,  கருப்பு சந்தை மற்றும் பதுக்கலை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்,  சிறு மற்றும் குறைந்த நிலம் கொண்ட விவசாயிகளுக்கு   சிறப்பு நிவாரண திட்டங்கள் அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

    விவசாயிகள் பாதுகாப்பாக இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும் உணவுப் பாதுகாப்பும் உறுதியாக இருக்கும் என்பதை அரசுகள் உணர்ந்து, உர விலை உயர்வை குறைக்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉ.பி-யில் பலத்த காற்று, மழை.. இடிந்து விழுந்த மேம்பாலம்..!! 6 பேர் உயிரிழப்பு..!!
    Next Article சித்தராமையா ராஜினாமாவை ஏற்றார் கவர்னர்!. புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவக்குமார்!
    Editor TN Talks

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.