Close Menu
    What's Hot

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இருமொழிக் கொள்கை: தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன்!!
    Featured

    இருமொழிக் கொள்கை: தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன்!!

    editor5By editor5May 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது, அரசு பள்ளியில் சேர்ந்த மழலைகளை அன்புடன் வரவேற்ற அமைச்சர், அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை குறித்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் டி.என்.ஏ-வில் ஊறிப்போன ஒன்று. இது நமது மாநிலத்தின் பாரம்பரியமும் பலமும் ஆகும்” என்று அவர் வலியுறுத்தினார்.

    தாய்மொழியான தமிழ் மூலம் உறவுகளுடன் இணைந்து பேசவும், ஆங்கிலம் மூலம் உலக அரங்கத்துடன் தொடர்புகொள்ளவும் ஏற்ற இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு உறுதியுடன் பின்பற்றும் என்று அமைச்சர் மீண்டும் உறுதியளித்தார். மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறினார். “இருமொழிக் கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. இதில் எந்த சமரசத்துக்கும் வழியில்லை” என்றார்.

    அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பேசினார். “அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கும் திட்டத்திற்கு நானே முதல் கையெழுத்திட்டேன். மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வது எங்கள் முன்னுரிமை” என்று தெரிவித்தார். தமிழக அரசு அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 4 லட்சம் புதிய மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுவரை 1.52 லட்சம் மாணவர்கள் ஏற்கெனவே புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

    அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை உறுதியாக நிலைநாட்டும் அமைச்சர் ராஜ்மோகனின் இந்த நிலைப்பாடு மாநில கல்வித் துறையில் முக்கியத்துவம் பெறுகிறது. அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் இந்த முயற்சிகள், ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சரிடமே அடாவடி வசூல்..!! அர்ச்சகர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!
    Next Article கோவை : சிறுமி பாலியல் வழக்கு..! விரைவில் நீதி கிடைக்கும்..! தமிழக அரசு உறுதி..!
    editor5

    Related Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    May 30, 2026

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.