Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்; தலைமைக் காவலர் பணி நீக்கம் – ஆணையர் அதிரடி
    Featured

    சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்; தலைமைக் காவலர் பணி நீக்கம் – ஆணையர் அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 police 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் 16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோடை விடுமுறையையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் குமரேசனின் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த , 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான வேலப்பன் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

    சிறிது நேரத்தில் குமரேசன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். ஆனால், போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதோடு, சிறுவனுக்கு அத்துமீறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

    இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவன், கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி, அருகில் இருந்த அசோக் நகர் காவல் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார்.

    போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கிருந்த வேலப்பனையும்,  குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, சிறுவனிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேலப்பன் அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பதும், வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

    தலைமைக் காவலர் ஒருவரே சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, காவல்துறையின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தலைமைக் காவலர் வேலப்பனை பணி நீக்கம் செய்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
    Next Article ஒழிக்கப்பட்ட புரோக்கர் கலாசாரம்; ஆடிப்போனது தீய சக்தி, ஊழல் சக்தி – தவெக ஐ.டி.விங் தம்பட்டம்
    Editor TN Talks

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.