Close Menu
    What's Hot

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின – லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை
    Featured

    கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின – லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 leema rose
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு அக்கட்சியில் புதிதாக இணைந்து  லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின்தான் காரணம் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் தன் மீது பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் பொய்த்துப் போனதாக லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

    சமீப காலமாக தன்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போனதாகவும்,

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால்  உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மாவால்  செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை எனவும் கூறியுள்ள லீமா ரோஸ் மார்ட்டின்,

    தன் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

    பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது தன் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுவதாகவும்,

    தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே தன்னுடைய முதன்மை கடமையாக எண்ணுவதாகவும்,

    தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!
    Next Article திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!
    Editor TN Talks

    Related Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    May 30, 2026

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.