Close Menu
    What's Hot

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு
    Featured

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

    கிழக்கு ஆப்கானிஸ்தானில் லக்மான் மாகாணத்தில், சமீபத்தில் நாடு திரும்பிய அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை, லாரியின் ஓட்டுநர் தூங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காயமடைந்த 36 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள நங்கர்ஹார் மாகாண மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் வசித்து வந்த சட்டவிரோத மற்றும் ஆவணங்களற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாட்டு அரசு கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக, சமீபகாலமாக லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு லாரிகள் மூலம் மூட்டை முடிச்சுகளுடன் திரும்பி வருகின்றனர். அப்படித் திரும்பிய ஒரு குடும்பத்தினரே இந்த கொடூர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் முறையான சாலை பராமரிப்பு இல்லாததும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததும் இது போன்ற தொடர் சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன. தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த விபத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !
    Next Article ச.ஜோசப் விஜய்யுடன் இணைந்தார் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் ; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் தவெகவில் சங்கமம்
    Editor TN Talks

    Related Posts

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.