Close Menu
    What's Hot

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!
    Featured

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    Editor web1By Editor web1June 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 02 at 8.39.04 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மூப்பு நிலைப் பட்டியல் (Seniority List) வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. மே 10ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன் என மேலும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இதையடுத்து மே 21ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆட்சி அமைக்க ஆதரவு தந்த காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சரவை இடம் வழங்கப்பட்டது. காங்கிரசுக்கு 2, ஐயூஎம்எல் மற்றும் விசிக-வுக்கு தலா ஒரு இடங்கள் அமைச்சரவையில் தரப்பட்டன. ஆக மொத்தம் தவெக அமைச்சரவையின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது.

    இந்தநிலையில், தமிழ்நாடு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மூப்பு நிலைப் பட்டியல் (Seniority List) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் விஜய் – அமைச்சரவையின் தலைவர் (முதலிடம்), நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் 2ம் இடம், விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு 3ம் இடம் வழங்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு 5-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆட்சி அமைக்க ஆதரவு தந்த காங்கிரசை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்  11-வது இடம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் 12-வது இடம், IUML-ஐ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் 13-வது இடம், விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியை சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் வன்னிய அரசு 14-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!
    Next Article பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!
    Editor web1
    • Website

    Related Posts

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    June 2, 2026

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.