இன்று பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜாவுக்கு அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்து மழையைப் பொழிந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்:
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! தனது இசையால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வருடி, காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை தமிழுக்கும் இந்திய திரையுலகிற்கும் வழங்கிய பெரும் இசை மேதை. கிராமத்து மண்வாசனையையும், மனித உணர்வுகளையும் இசையின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை அவருக்கே உரியது. இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.

கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்:-
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! தனது இசையால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வருடி, காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை தமிழுக்கும் இந்திய திரையுலகிற்கும் வழங்கிய பெரும் இசை மேதை. கிராமத்து மண்வாசனையையும், மனித உணர்வுகளையும் இசையின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை அவருக்கே உரியது. இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்;
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.

மருத்துவர் அன்புமணி, பாமக தலைவர்:
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான்.
இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்.
டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்:
இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாகவும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று.
கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அண்ணாமலை, பாஜக முன்னாள் தலைவர்
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி இளையராஜா
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் இளையராஜா அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
வானதி சீனிவாசன், பாஜக மகளிரணி தேசிய தலைவர்;-
உலகெங்கிலும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களை தனது மெல்லிசையால் மகிழ்வித்து வரும், இந்திய இசையுலகின் பெருமையாக விளங்கும் இசைஞானி
இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைக்கு புதிய பரிமாணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் தங்களின் மகத்தான பயணம் மேலும் பல ஆண்டுகள் தொடரவும், பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தங்கள் இசையால் உலக மக்களை தொடர்ந்து மகிழ்விக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
