Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி
    Featured

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Editor web2By Editor web2June 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், தற்போதைய சவால்களைத் தாண்டி கட்சி மீண்டும் வலுவாக எழுச்சி பெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தங்களது அரசியல் பயணத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் துரோகங்களை எதிர்கொண்டு கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    தாம் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகும் பல்வேறு இன்னல்கள், சவால்கள் மற்றும் துரோகங்களை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும், கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்த சிலர் தற்போது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையால் மனமுடைந்து தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், அதிமுகவின் தீவிர தொண்டருமான கே.எஸ். மகேந்திரன் உயிரிழந்த செய்தி தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கட்சியின் தற்போதைய நிலை குறித்து தொண்டர்கள் யாரும் மனம்தளர வேண்டாம் என்றும், எந்தவித விபரீத முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    வெற்றியும் தோல்வியும் அரசியலில் இயல்பானவை என்றும், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பல முறை தோல்விகளை கடந்து மீண்டும் வெற்றி கண்டுள்ளது என்றும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவிலிருந்து கட்சியை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்கால தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு
    Editor web2
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.