Close Menu
    What's Hot

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?
    Featured

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    Editor web2By Editor web2June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான பின்னர், பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்டதாகவும், ஆனால் அதிமுகவில் அப்போது நிலவிய குழப்பம் காரணமாக விஜய் சந்திக்க எடப்பாடி தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, சிடிஆர் நிர்மல்குமார் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்தார்.

    “விஜய் தரப்பிலோ, தவெக அலுவலகத்திலிருந்தோ, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை. யாரோ சில அதிமுக தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுவதும் உண்மையல்ல” என்று தெரிவித்தார்.

    மேலும், “இளைஞர்களிடம் சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா பாணி பிரசாரங்கள் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி விஜய் வெற்றி பெற்றுள்ளார். அது நீண்டகால அரசியல் உழைப்பின் பலன் அல்ல. மாற்றத்தை விரும்பிய ஒரு பகுதி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர்” என்றும் விமர்சித்தார்.

    KP Munusamyதவெக கட்சியின் அமைப்பு வலிமை குறித்து கேள்வி எழுப்பிய கே.பி.முனுசாமி, “அதிமுகவுக்கு கிராமம் தோறும் கிளைக் கழகங்கள் உள்ளன. ஆனால் தவெகவுக்கு அப்படியான வலுவான அமைப்பு இல்லை. சமூக வலைதள ஆதரவு மட்டுமே ஒரு அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்த முடியாது” என்றார்.

    விஜயின் சமீபத்திய அரசியல் பேச்சுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “முதல்வர் பதவியில் இருப்பவர் சினிமா வசன பாணியில் பேசாமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும். கைதட்டுபவர்களை மட்டும் பார்க்காமல், முகம் சுழிப்பவர்களையும் கவனிக்க வேண்டும்” என கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!
    Next Article அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    June 3, 2026

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.