Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உலக வெப்ப அபாயப் பட்டியலில் சென்னை, மதுரை… டாப் 10-ல் 3 இந்திய நகரங்கள்!
    Featured

    உலக வெப்ப அபாயப் பட்டியலில் சென்னை, மதுரை… டாப் 10-ல் 3 இந்திய நகரங்கள்!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    heat wave
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளவில் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 50 நகரங்களின் பட்டியலை இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 205 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள், இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    உலகளவில் அதிக வெப்ப அபாயத்தைக் கொண்டுள்ள முதல் 50 நகரங்களின் பட்டியலில், வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு இந்தியாவில் இருந்து மட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் சென்னை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    வெப்பத்தின் தாக்கம், அதைத் தாங்கும் மக்களின் வாழ்வாதார நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், உலகளவில் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் மூன்று நகரங்கள் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், குஜராத்தின் அகமதாபாத் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூர் 4-வது இடத்திலும், தமிழகத்தின் பாரம்பரிய நகரான மதுரை 7-வது இடத்திலும் உள்ளன.

    ஈராக்கின் ‘அல் பஸ்ரா’ (Al Basrah) நகரம் இப்பட்டியலில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அதிக அபாயத்தில் உள்ள நகரங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் சகாரா துணை ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன.  இந்திய அளவில் இந்த வெப்ப அபாயப் பட்டியலில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, பாட்னா, போபால், கான்பூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களும் தீவிர பாதிப்பு வளையத்திற்குள் உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

    ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “ஒரு நகரத்தின் வெப்ப அபாயம் என்பது அங்குப் பதிவாகும் வெயிலின் அளவை மட்டும் பொறுத்தது அல்ல. அந்த நகரத்தில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார நிலை, காற்றோட்டமற்ற குடிசைப் பகுதிகள், மரங்கள் இல்லாத சூழல் (பச்சை மண்டலக் குறைபாடு) மற்றும் ஏசி போன்ற குளிரூட்டும் வசதிகள் இல்லாத நிலை போன்ற உள்கட்டமைப்பு பலவீனங்களே பாதிப்பைத் தீவிரமாக்குகின்றன” என்று விளக்கியுள்ளனர்.

    மேலும், வெப்பத்தைத் தணிக்க ஏசி பயன்பாட்டை மட்டுமே அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது, மின்சாரத் தேவையை அதிகரித்து புவி வெப்பமயமாதலை மேலும் ஒரு நச்சுச் சுழற்சியாக (Vicious cycle) மாற்றிவிடும் என்றும், இதற்கு மாற்றாகப் பசுமைப் பரப்பை அதிகரிப்பது மற்றும் இயற்கையான குளிரூட்டும் தொழில்நுட்பங்களை நோக்கி நகரங்கள் மாற வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலை Vs லதா ரஜினிகாந்த்: புதிய அறிவிப்பின் பின்னணியில் பாஜகவா?
    Next Article பணி நியமனங்களுக்கு லஞ்சம்; நேரு மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
    Editor web3
    • Website

    Related Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    June 19, 2026

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.