Close Menu
    What's Hot

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    விசா கட்டணம் ரத்து..!! டிரம்பிற்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!! குஷியில் இந்தியர்கள்..!!

    ஆப். எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி..! உலகின் முதல் அணியாய் சாதனை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மேட்டூரில் தண்ணீர் இல்லை – விவசாயிகளுக்கு மானிய உதவி – அன்புமணி வலியுறுத்தல்
    அரசியல்

    மேட்டூரில் தண்ணீர் இல்லை – விவசாயிகளுக்கு மானிய உதவி – அன்புமணி வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும்,  தென்மேற்கு பருவமழை  தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது.

    இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி  செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    எனவே நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படா விட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.

    இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை  பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும்.

    இதற்காக  காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட  தமிழகம் முழுவதும் உள்ள  உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.

    அத்துடன்  24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும்,  இடுபொருள் மானியமாக  ஏக்கருக்கு  ரூ.5,000 வீதம்  வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல் நாளிலேயே இத்தனை லட்சம் பேர் இணைவா..?? மாஸ் காட்டும் அண்ணாமலை..!!
    Next Article “பர்மிட் இல்லாமல் ஒரு செங்கல் கூட வெளிய போகக்கூடாது!. சேலம் கனிமவளத்துறை அதிகாரி எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    25 மாநகராட்சிகளிலும் 24*7 தடையின்றி குடிநீர் வழங்கணும்..!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

    June 9, 2026

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    விசா கட்டணம் ரத்து..!! டிரம்பிற்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!! குஷியில் இந்தியர்கள்..!!

    ஆப். எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி..! உலகின் முதல் அணியாய் சாதனை..!

    ‘HISTORIC MOMENT’! நாளை புதிய சாதனை படைக்கப்போகும் பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்..!! போராட்ட வன்முறையில் 11 பேர் பலி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.