Close Menu
    What's Hot

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“பர்மிட் இல்லாமல் ஒரு செங்கல் கூட வெளிய போகக்கூடாது!. சேலம் கனிமவளத்துறை அதிகாரி எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    “பர்மிட் இல்லாமல் ஒரு செங்கல் கூட வெளிய போகக்கூடாது!. சேலம் கனிமவளத்துறை அதிகாரி எச்சரிக்கை!

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem sengal warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “முறையான அனுமதி சீட்டு இல்லாமல் ஒரு செங்கல் கூட வெளியே போகக்கூடாது. மீறி சென்றால் பறிமுதல் செய்துவிடுவேன்” என செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு சேலம் கனிமவளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சேலம் அயோத்தியாபட்டினம் அடுத்த குள்ளம்பட்டி பகுதியில், எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப் பாறைகள் உடைக்கப்பட்டு, மண்ணும் வெட்டி எடுக்கப்படுவதாகக் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிக்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் இறங்கினர்.

    அப்போது, அங்கு அனுமதியின்றி பல டன் கணக்கில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி மலை போலக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணின் மதிப்பை அதிகாரிகள் அளவீடு செய்து ஆய்வு செய்தனர். இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    இந்தச் சோதனையின் போது, அந்தப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த மூன்று செங்கல் சூளைகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உரிய பர்மிட் உள்ளதா என அதிகாரிகள் கேட்டதற்கு, “முன்பு ஒருமுறை மட்டுமே அனுமதி வாங்கினோம், அதன் பிறகு வாங்கவில்லை” என சூளைத் தரப்பில் மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர்.

    இதையடுத்து, வாழப்பாடி தாசில்தார் முன்னிலையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த 3 செங்கல் சூளைகளுக்கும் உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு விதிகளை மீறிக் குவிக்கப்பட்டிருந்த மண்ணை அளவீடு செய்து, அதற்கான அபராதத் தொகையை விதிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இனிமேல் உரிய அனுமதி பெற்ற பின்னரே செங்கல் தயாரிக்க வேண்டும், மண் எடுக்க வேண்டும் என கறாராகக் கூறிய கனிமவளத்துறை அதிகாரி, தடையை மீறி வாகனங்கள் வெளியேறினால் கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். அதிகாரிகளின் இந்த திடீர் ஆக்சனால் அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோத கும்பல் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேட்டூரில் தண்ணீர் இல்லை – விவசாயிகளுக்கு மானிய உதவி – அன்புமணி வலியுறுத்தல்
    Next Article மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    June 9, 2026

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    June 9, 2026

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை..!! அவதூறு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு..!!

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.