Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வறுமை தாளாமல் உயிரை மாய்க்க முயற்சி!. நடுரோட்டில் தீக்குளித்த பெண்!. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
    Featured

    வறுமை தாளாமல் உயிரை மாய்க்க முயற்சி!. நடுரோட்டில் தீக்குளித்த பெண்!. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai lady fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியில், மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையின் நடுவே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வள்ளி (45) என்ற அந்தப் பெண், வீடுகளில் வேலை செய்து தினசரி வாழ்க்கையை ஓட்டவே மிகவும் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடுமையான வறுமையின் காரணமாக மனமுடைந்த அவர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உடனே அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வள்ளியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மதிச்சியம் போலீசார், அந்தப் பெண் வறுமையால் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் தீக்குளித்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிக்கலில் பினராயி விஜயனின் மகள்..!! அமலாக்கத்துறைக்கு கேரள கோர்ட் கிரீன் சிக்னல்..!!
    Next Article ராகுலை குறிவைத்த திமுக… முரசொலி கட்டுரையும் மாணிக்கம் தாகூர் பதிலும் சொல்வது என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.