Close Menu
    What's Hot

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்!
    தமிழ்நாடு

    பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, திருமண தகராறு தொடர்பாக ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

    நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்து, இணையத்தில் இருவர் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், ரவி மோகனை பிரிவதாக கெனிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, மே 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது குழந்தைகளை பார்க்க விடுவதில்லை; தன்னை புரிந்து கொண்டு வந்த பெண்ணையும் துரத்திவிட்டனர்; தனது குழந்தைகளுக்காக அமைதி காக்கிறேன், என கூறியிருந்தார். விவாகரத்து வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என கடந்த ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, ரவி மோகன் ஊடங்களை சந்தித்ததாக, ஆர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனு கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் ஆர்த்தி தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்திருந்தது. இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ரவி மோகன் மன்னிப்பு கேட்டு பத்திரிகையில் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதில், சென்னை உயர் நீதிமன்றம் 2025 மே மாதம் பிறப்பித்த உத்தரவை மீறி, கடந்த மே 16ம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக திருமணத் தகராறு தொடர்பான கருத்துகளை தெரிவித்தற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும், தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். பத்திரிகையில் பொது அறிவிப்பு வெளியிட்டது குறித்த ஆவணமும் ரவி மோகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரேணிகுண்டா 2‘ பர்ஸ்ட் லுக்!
    Next Article அம்பேத்கர் சிலை அகற்றம்… திருமாவளவன் நிகழ்ச்சியில் கடைசி நிமிடத்தில் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    July 29, 2026

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    July 29, 2026

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.