Close Menu
    What's Hot

    புதிய வக்ஃபு சட்டம்: தமிழக அரசின் நிலை என்ன?  

    டெல்லி ஏர்போர்ட்டில் ராட்சத சூறைக்காற்று!. 3 விமானங்கள் சேதம்!. ரன்வேயில் ஓடிய ஏணிகள்!

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனம்..!! ரூ.95.35 ஆக சரிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தண்ணியும் வரல, கரெண்டும் இல்ல..!! ஆத்திரத்தில் சாலை மறியலில் குதித்த மக்கள்..!!
    Featured

    தண்ணியும் வரல, கரெண்டும் இல்ல..!! ஆத்திரத்தில் சாலை மறியலில் குதித்த மக்கள்..!!

    editor5By editor5June 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 07 at 11.57.13 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காரைக்குறிச்சி கிராமத்தில் மின்சார தட்டுப்பாடு மற்றும் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத இந்த மின்தடைகள் இரவு நேரங்களில் அதிகம் நீடிப்பதால், மக்கள் தூக்கமின்றி கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    மின்சார தட்டுப்பாடு நீடிப்பதால் குடிநீர் ஏற்றும் மோட்டார்கள் இயங்காத நிலையில், கிராமத்தில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக சரியான குடிநீர் கிடைக்காததால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அவர்களின் அன்றாடப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் உடனடி நடவடிக்கைக்கு இறங்கினர்.

    சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி பிளாஸ்டிக் குடங்களுடன் காரைக்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “மின்சாரத் தட்டுப்பாட்டை உடனடியாகத் தீர்க்கவும், குடிநீர் விநியோகத்தை சீரமைக்கவும்” எனக் கோஷங்கள் எழுப்பிய அவர்கள், ஜோசப் விஜய் அரசை கடுமையாக விமர்சித்தனர். போராட்டம் தீவிரமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதிமொழி அளித்தால்தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம்” என மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

    பின்னர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக காரைக்குறிச்சி – தா.பழூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரலாற்றில் இன்று… 51 ஆண்டுகளுக்கு முன்பு… முதல் ODI உலக கோப்பை தொடர் தொடங்கப்பட்ட சுவாரஸிய வரலாறு!
    Next Article அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறாரா ராகவா லாரன்ஸ்..?? ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு..!!
    editor5

    Related Posts

    புதிய வக்ஃபு சட்டம்: தமிழக அரசின் நிலை என்ன?  

    June 8, 2026

    டெல்லி ஏர்போர்ட்டில் ராட்சத சூறைக்காற்று!. 3 விமானங்கள் சேதம்!. ரன்வேயில் ஓடிய ஏணிகள்!

    June 8, 2026

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனம்..!! ரூ.95.35 ஆக சரிவு..!!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய வக்ஃபு சட்டம்: தமிழக அரசின் நிலை என்ன?  

    டெல்லி ஏர்போர்ட்டில் ராட்சத சூறைக்காற்று!. 3 விமானங்கள் சேதம்!. ரன்வேயில் ஓடிய ஏணிகள்!

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனம்..!! ரூ.95.35 ஆக சரிவு..!!

    கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை – இன்று முதல் பொது கலந்தாய்வு

    பர்கரில் நெளிந்த புழுக்கள்..!! கொந்தளித்த இளைஞர்கள்..!! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.