தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பெ.சண்முகம் நேற்று செய்தியாளகளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏதாவது ஒரு கட்சியை அழிக்க வேண்டும் என்னும் பாஜகவின் திட்டத்தில், அதிமுக பலியாகி இருப்பதாகக் கூறியதோடு, அடுத்த தேர்தலுக்கு அதிமுக இருக்குமா என்பது கேள்விக்குறிதான் என சந்தேகத்தைக் கிளப்பினார்.
திமுக கூட்டணி குறித்த கேள்வி, அப்படி ஒரு கூட்டணியே இல்லை என்றார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதைவிட அந்த கூட்டணியே தற்போது இல்லை எனக் கூறியவர், அதே நேரம் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.
மேலும் தவெக அரசின் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போது இல்லை என்றார் பெ.சண்முகம்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை நாங்கள் கடுமையாக எதிர்த்ததால்தான், அது தொடரவில்லை.
புதிய தவெக அரசு, 3 மாதம்கூட தாங்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கல் கூறுவது தவறு என ஆவேசம் காட்டியவர், தமிழகத்தில் பாஜக எடுபடாததால் மோடி, அமித்ஷா ஆசியுடன் ஆர்எஸ்எஸ்-ன் இன்னொரு அமைப்பை அண்ணாமலை தொடங்கியுள்ளார். அதில் பல லட்சம் பேர் இணைந்ததாக ஒரு பிம்பத்தை கிளப்பிவிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
