Close Menu
    What's Hot

    புதிய வக்ஃபு சட்டம்: தமிழக அரசின் நிலை என்ன?  

    டெல்லி ஏர்போர்ட்டில் ராட்சத சூறைக்காற்று!. 3 விமானங்கள் சேதம்!. ரன்வேயில் ஓடிய ஏணிகள்!

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனம்..!! ரூ.95.35 ஆக சரிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மேயர் பிரியா மீது புதிய சர்ச்சை – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பகீர் தகவல்
    Featured

    மேயர் பிரியா மீது புதிய சர்ச்சை – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பகீர் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 meyar B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்மையில் தவெக எம்.எல்.ஏவுடன் மோதல் போக்கில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா மீது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

    ஜூன் 4ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலத்தில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா, திரு விக நகர் தவெக எம்.எல்.ஏ பல்லவி, மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் கற்பகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ரிப்பன் வெட்டும் நிகழ்வில் மேயருக்கு முன்னதாக எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்தார். பின்பு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியின்போது மேயர் பிரியா விளக்கை ஏற்றினார். தொடந்து அடுத்ததாக  விளக்கேற்ற வந்த எம்.எல்.ஏ பல்லவியிடம் மெழுகுவத்தியை கொடுக்காமல் கல்வி இணை ஆணையாளருக்கு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடந்து பல்லவி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

    இதன்பின்னர் அதே மண்டலத்தில் நடைபெற்ற மற்றுமொரு பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் கலந்து கொண்டனர். அப்போது
    மேயர் பிரியா விளக்கேற்ற அழைத்தபோதும் எம்எல்ஏ பல்லவி மறுத்துவிட்டார்.

    007 meyar A

    தன்னை மேயர் அவமதித்து விட்டதாக எம்.எல்.ஏ பல்லவியும்,  புரோட்டாகால்படி மேயருக்கு அடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் விளக்கேற்ற வேண்டும் என மேயரும் தங்கள் தரப்பில் கருத்து தெரிவித்தனர்.

    கடந்த திமுக ஆட்சியில்  முதலமைச்சரின் காரில் மேயர் பிரியா தொங்கியபடி பயணித்தது எந்த புரோட்டாகால்படி எனக் கேள்வியும் எழுந்தது?

    007 meyar

    இந்த நிலையில் மேயர் பிரியா மீது இன்னுமொரு சர்ச்சை எழுந்துள்ளது.

    அது கடந்த 4 வருடங்களாக அவர் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பதுதான்.

    ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவலைக் கேட்டுள்ளார். அதில்தான் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட மாமன்ற உறுப்பினர்கள் 157 பேர் தங்களது சொத்து விவரங்களை கடந்த 4 ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி சட்டப்படி, மன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள், 90 நாள்களுக்குள் தங்களது அசையும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் அதை புதுப்பிக்கவும் வேண்டும்.  ஆனால், 2022  தேர்தலில் போட்டியிட்டு வென்ற மேயர் பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள் என மாமன்ற உறுப்பினா்கள் 157 போ்  சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. வெறும் 43 மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே தாக்கல் விவரங்களை அளித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகட்டுமானத் துறைக்கு புதிய சவால்..!! பொருட்கள் விலை கடும் உயர்வு..!!
    Next Article சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக..!! சீமான் வலியுறுத்தல்..!!
    Editor TN Talks

    Related Posts

    புதிய வக்ஃபு சட்டம்: தமிழக அரசின் நிலை என்ன?  

    June 8, 2026

    டெல்லி ஏர்போர்ட்டில் ராட்சத சூறைக்காற்று!. 3 விமானங்கள் சேதம்!. ரன்வேயில் ஓடிய ஏணிகள்!

    June 8, 2026

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனம்..!! ரூ.95.35 ஆக சரிவு..!!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய வக்ஃபு சட்டம்: தமிழக அரசின் நிலை என்ன?  

    டெல்லி ஏர்போர்ட்டில் ராட்சத சூறைக்காற்று!. 3 விமானங்கள் சேதம்!. ரன்வேயில் ஓடிய ஏணிகள்!

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனம்..!! ரூ.95.35 ஆக சரிவு..!!

    கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை – இன்று முதல் பொது கலந்தாய்வு

    பர்கரில் நெளிந்த புழுக்கள்..!! கொந்தளித்த இளைஞர்கள்..!! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.