Close Menu
    What's Hot

    சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது: வைகோ

    பெர்லினில் கோலாகலமாக நடந்த ஸ்ரீ கணேசர் கோயில் கும்பாபிஷேகம்!

    ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்வைத்த 7 அதிரடிப் புகார்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க..!! What bro.. It’s very wrong bro..!! மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்..!!
    Featured

    கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க..!! What bro.. It’s very wrong bro..!! மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்..!!

    editor5By editor5June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ் இன்று காலை மதுரையில் அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். சென்னை சைபர் குற்றவியல் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு அவரது வீட்டை சுற்றி வளைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

    மாரிதாஸ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோக்களில், முதல்வர் விஜய்யை “பொம்மை முதல்வர்” என விமர்சித்திருந்தார். மேலும், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத் துறையால் (ED) சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதில் 258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு பேசியிருந்தார். தமிழகத்தின் சிறு துறைமுகங்கள் தொடர்பான பொறுப்பு ஆதவ் அர்ஜூனாவிடம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசுக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் என தவெக தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், மாரிதாஸின் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தச் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கண்டிக்கப்பட்டுள்ளது. “கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிசப் போக்கு” என விமர்சித்த அதிமுக, “ஆட்சி மாறிவிட்டதா? ஆனால் காட்சிகள் மாறவில்லையே?” எனக் கேள்வி எழுப்பியது. முன்பு திமுக ஆட்சியின் போது பாசிசம், பாயாசம் என விமர்சித்தவர்கள் இப்போது அதே மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுப்பது, கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிளாக் அவுட் செய்வது, யூடியூப்பில் பேசினால் கைது செய்வது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. மாரிதாஸ் பேசியவை உண்மை அல்ல என்றால் அவதூறு வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது செய்தியாளர்கள் முன் விளக்கம் அளிக்கலாம் என அதிமுக சுட்டிக்காட்டியது. “நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்காமல், அதிகாலையில் வீட்டை சுற்றி வளைத்து கைது செய்யும் அராஜகம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மடியில் கனமிருப்பதால் இத்தகைய அச்சம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், ஜனநாயகக் குரல்களை நசுக்கும் இந்தப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது எனவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

    மாரிதாஸ் மீதான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம், அரசின் பொறுப்பு, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை எப்படி கையாளப் போகிறது என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு இது முன்னுதாரணமாக அமையுமா என அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாரிதாஸ் கைது தொடர்பாக தவெக தரப்பில் இதுவரை முறையான விளக்கம் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய பரிமாணத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!
    Next Article விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!
    editor5

    Related Posts

    சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது: வைகோ

    June 8, 2026

    ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்வைத்த 7 அதிரடிப் புகார்கள்!

    June 8, 2026

    தவெக ஆட்சி 3 மாதம்தான் என ஸ்டாலின் பேசி இருக்கக்கூடாது!- CPI வீரபாண்டியன்

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது: வைகோ

    பெர்லினில் கோலாகலமாக நடந்த ஸ்ரீ கணேசர் கோயில் கும்பாபிஷேகம்!

    ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்வைத்த 7 அதிரடிப் புகார்கள்!

    தவெக ஆட்சி 3 மாதம்தான் என ஸ்டாலின் பேசி இருக்கக்கூடாது!- CPI வீரபாண்டியன்

    ஸ்டாலின் பக்கத்துலதான் உட்காருவேன்! CM விஜய் போட்டோ சர்ச்சைக்கு நெல்லை மேயர் கொடுத்த நச் பதில்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.