Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலில் திருச்செந்தூர்.. இப்போ பழனி..!! அதிரடி ஆய்வில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்..!!
    Featured

    முதலில் திருச்செந்தூர்.. இப்போ பழனி..!! அதிரடி ஆய்வில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    editor5By editor5June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 31 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி கோவிலில் காத்திருப்போர் கூடத்துக்குள் சென்ற அமைச்சர் ரமேஷ் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று பழனி முருகன் கோயிலில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். கடந்த வாரம் திருச்செந்தூர் கோயிலில் அவரிடமே தரிசனத்திற்கு பணம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னணியில், இன்றைய பயணத்தில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்துக் கொள்ள அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பழனி-கொடைக்கானல் சாலையில் மலைக்கோயிலுக்கு செல்லும் முக்கிய பாதையில் ரூ.53 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாயிலை அமைச்சர் ரமேஷ் இன்று திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து, கோயில் பூஜை தேவைகளுக்காக பராமரிக்கப்படும் எம்.எல்.ஏ. ராக்கால நந்தவனத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த நந்தவனத்தில் பல்வேறு வகையான பூக்கள் நட்டு வளர்க்கப்பட்டு, அவை அனைத்தும் பழனி கோயில் பூஜைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பசுமை முயற்சி கோயிலின் தினசரி தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், நந்தவனம் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் உள்ளூர் அதிமுக எம்.எல்.ஏ. ரவி மனோகரன் பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் முதலில் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்ற ரவி மனோகரன், அதிமுக நிர்வாகிகள் விவகாரத்தை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரே முன்னுக்கு வந்தார்.

    அமைச்சர் உடனடியாக கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்களை அழைத்து, “உள்ளூர் மக்கள் பிரதிநிதியின் பெயரை ஏன் விடுபட விட்டீர்கள்?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார். இனிமேல் இத்தகைய அலட்சிய செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்த அவர், பின்னர் ரவி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் நேரில் சென்று அதிகாரிகளின் தவறுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார். அமைச்சர் பின்னர் பெருந்திட்ட வளாகப் பகுதியில் சமீபத்தில் கோயில் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட 58 ஏக்கர் நிலத்தைப் பார்வையிட்டார். இங்கு பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், வணிக வளாகக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

    காத்திருப்போர் கூடத்துக்குச் சென்ற அமைச்சர், பக்தர்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டார். பக்தர்கள், மின் இழுவை ரயில் நிலையத்திற்குச் செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை, குடிநீர் பற்றாக்குறை மற்றும் போதிய கழிப்பிட வசதிகள் இன்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினர். அமைச்சர் அதிருப்தி அடைந்து, “இவ்வளவு நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதது ஏன்? இதை யார் கவனிக்கப் போகிறீர்கள்?” என்று அதிகாரிகளைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு கடிந்து கொண்டார். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தையும், அதில் உள்ள உப்பின் அளவையும் நேரில் சோதித்துப் பார்த்தார்.

    காத்திருப்பு கூடத்தில் தெருநாய்கள் சுற்றித் திரிவதையும், கட்டுமானப் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு கோபமடைந்த அமைச்சர், பொறுப்பான அதிகாரியின் பெயரை உதவியாளரிடம் குறித்துக் கொள்ள உத்தரவிட்டார். “நூற்றுக்கணக்கான பக்தர்கள், குழந்தைகள் இருக்கும் இடத்தில் தெருநாய்கள் அலைவது ஏற்புடையதல்ல. நாய் கடித்தால் யார் பொறுப்பு?” என்று கேட்ட அமைச்சரின் தொடர் கேள்விகளால் அதிகாரிகள் திணறினர். பின்னர் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மலைக்கோயிலுக்குச் சென்று அங்கு நாள்தோறும் வழங்கப்படும் அன்னதானத்தின் தரத்தையும் சுவைத்துப் பார்த்தார்.

    திருச்செந்தூர் சம்பவத்தைப் போலவே பழனியிலும் அமைச்சரின் தீவிர ஆய்வு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பையும், கதிகலங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு மூலம் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய அமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுப்பார் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் தொடர் இழுபறி..!! சென்னை ஐகோர்ட் அதிரடி ஆர்டர்..!!
    Next Article ”மாரிதாஸ் கைது  அதிகாரத் திமிரின் உச்சம்” – சீமான் காட்டம்
    editor5

    Related Posts

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    July 29, 2026

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    July 29, 2026

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.