Close Menu
    What's Hot

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்
    Featured

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், லஞ்சம் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முதலமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கையை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ்  கூறுகையில்,

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் வேண்டும் என்பது தொடர்பாக தான் விளக்கியதை முதலமைச்சர் கவனமாகக் கேட்டுக் கொண்டதாகவும், முதலமைச்சரின் பேச்சு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆளும்கட்சியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக,  தற்போது ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ,ஸ்டாலினின் மனமாற்றத்தை வரவேற்பதாக அன்புமணி கூறினார்.

    தமிழக பட்ஜெட்டில் 700 கோடி ஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் இரண்டு மாதத்தில் இந்த கணக்கெடுப்பை முடித்துவிடலாம்.கர்நாடகாவில் இரண்டு லட்சம் அதிகாரிகள் துணையோடு 600 கோடி செலவு செய்து அந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள் அதன் மூலமாக பல்வேறு சமூகங்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியல் சமூக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.  பின்தங்கிய சமுதாயங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்து அவர்களை முன்னேற்றலாம் என்று கூறினார்.

    தவெக ஆட்சி எப்படி உள்ளது என்னும் கேள்விக்கு, நாளையுடன்  புதிய அரசு அமைந்து ஒரு மாதம் நிறைவடைகிறது. நன்றாக செயல்படுகிறார்கள், ஊழல் பெறும் அளவில் குறைந்துள்ளது, பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆட்சியாளர்கள் மாறி உள்ளனர். அதிகாரிகள் மாற நேரம் வேண்டும் என்றார்.

    தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதன் வழியே, ஊழல் செய்ய முடியும் என்பதால் அரசு சார்பில் மின் உற்பத்தி செய்வதைக் கடந்த ஆட்சியாளர்கள் விரும்பவில்லை எனவும், திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    மேகதாது பிரச்சனை சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்ததாகவும் இது குறித்து முடிவெடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அன்புமணி கூறினார்.

    #AnbumaniRamadoss #Vijay #TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?
    Next Article ஹலோ.. யாராவது இருக்கீங்களா..?? ஹாயாக உலா வரும் சிறுத்தை..!! பீதியில் மக்கள்..!!
    Editor TN Talks

    Related Posts

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    June 19, 2026

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    June 19, 2026

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    ஜூன் 29-ல் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு!

    வால்பாறை குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை!. பொதுமக்கள் அச்சம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.