Close Menu
    What's Hot

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்!. பிசிசிஐ (CoE) மையத்தில் நடந்தது என்ன?. இந்திய அணிக்கு அதிர்ச்சி!
    Featured

    ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்!. பிசிசிஐ (CoE) மையத்தில் நடந்தது என்ன?. இந்திய அணிக்கு அதிர்ச்சி!

    Editor web3By Editor web3June 10, 2026Updated:June 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hardik pandya 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவருக்கு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் அவரது மறுவருகையைத் தடுத்துள்ளது.

    கடந்த ஜூன் 2 முதல் பெங்களூரு CoE மையத்தில் ஹர்திக் பாண்டியா தீவிர உடற்தகுதிப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 10 ஓவர்கள் முழுமையாக வீசி மேட்ச் சிமுலேஷன் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்திருந்தார். இதனால் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜூன் 11 அன்று தர்மசாலாவில் உள்ள இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இறுதி கட்டப் பயிற்சியின் போது அவருக்கு குவாட்ரைசெப்ஸ் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ அதிகாரியின் அறிக்கை, மிகவும் தாமதமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹர்திக்கிற்கு காலில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், வலியும் வீக்கமும் உள்ளது. இது நீண்ட கால காயம் இல்லை என்றாலும், அடுத்த சில நாட்களுக்குக் காலில் அதிக எடையோ அல்லது அழுத்தமோ கொடுப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் அவர் பெங்களூரிலேயே தங்கி, CoE பிசியோதெரபிஸ்டுகளின் கண்காணிப்பில் மீண்டு வரவுள்ளார்.”

    கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஹர்திக், இத்தொடரின் மூலம் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டிற்குள் நுழையவிருந்தார். ஆனால் இந்தத் தசைப்பிடிப்பு காரணமாக அவர் மேலும் இரண்டு வாரங்கள் பெங்களூரிலேயே சிகிச்சையில் இருக்க வேண்டியுள்ளது.

    ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதால், 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மூன்று போட்டிகளிலும் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

    ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் தசைநார் கிழிவு காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா உடற்தகுதி பெற்று அணியில் இணைய CoE மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டிருந்த வேளையில், இந்தத் திடீர் காயம் அணி நிர்வாகத்திற்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    bcci Centre of Excellence? Hardik Pandya miss Afghanistan ODIs Nitish Kumar Reddy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!
    Next Article பாரதிராஜா மறைவு; டீசர் வெளியீட்டை தள்ளி வைத்த விஷால்
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    June 21, 2026

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.