Close Menu
    What's Hot

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வாய் மூடிப் பேசினால் ரெட் கார்டு!. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புது ரூல்ஸ்!
    Featured

    வாய் மூடிப் பேசினால் ரெட் கார்டு!. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புது ரூல்ஸ்!

    Editor web3By Editor web3June 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    FIFA new rules
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2026 ஃபீஃபா உலகக் கோப்பைத் தொடருக்காக, சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) பல புதிய விதிமுறைகளை அங்கீகரித்து அறிவித்துள்ளது. அதன்படி, வீரர்களின் நடத்தை, நேர வீணாவதை தடுத்தல், மாற்று வீரர்கள் மற்றும் VAR தொழில்நுட்பத்தின் பொறுப்புகள் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    வாயை மூடிக்கொண்டு பேசினால் ரெட் கார்டு: மைதானத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடும்போதோ அல்லது வாக்குவாதம் செய்யும்போதோ, கைகளாலோ அல்லது தங்களது ஜெர்சியாலோ வாயை மூடிக்கொண்டு பேசும் வீரர்களுக்கு இனி நேரடியாக ‘ரெட் கார்டு’ வழங்கப்படும்.

    அதாவது, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் மற்றும் பென்ஃபிகா அணியின் ஜியான்லுகா ப்ரெஸ்டியானி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, வாயை மூடிக்கொண்டு இனவெறி வார்த்தைகள் பேசப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே இந்த கடுமையான விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், சாதாரண நேரங்களில் சக வீரர்களுடன் வாயை மூடிப் பேசுவதற்குத் தடையில்லை.

    5 வினாடி கவுண்ட்டவுன்: விளையாட்டைத் தாமதப்படுத்துவதைத் தவிர்க்க நடுவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. த்ரோ-இன் (Throw-in) அல்லது கார்னர் கிக் (Corner kick) எடுப்பதில் வீரர்கள் வேண்டுமென்றே தாமதம் செய்தால், நடுவர்கள் 5 வினாடி கவுண்ட்டவுனைத் தொடங்குவார்கள். அதற்குள் பந்தை பாஸ் செய்யாவிட்டால், அந்த வாய்ப்பு எதிரணிக்கு  மாற்றப்படும்.

    சப்ஸ்டிடியூட் விதிகளில் கட்டுப்பாடு:  ஒரு வீரருக்கு மாற்றாக மற்றொரு வீரர் களம் இறங்கும்போது, வெளியேறும் வீரர் 10 வினாடிகளுக்குள் தனக்கு அருகில் இருக்கும் மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியேற வேண்டும். தவறினால், உள்ளே வரவிருக்கும் மாற்று வீரர் உடனடியாக அனுமதிக்கப்பட மாட்டார். அடுத்த நிறுத்தத்தின் போதுதான் அவர் அனுமதிக்கப்படுவார். இதனால் அந்த அணி தற்காலிகமாக 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழல் ஏற்படும்.

    VAR பொறுப்புகள் அதிகரிப்பு: தவறாக வழங்கப்பட்ட கார்னர் கிக்குகளை மறுபரிசீலனை செய்ய இனி VAR-க்கு அனுமதி உண்டு. கார்னர் கிக் அல்லது ஃபிரீ கிக் எடுப்பதற்கு முன்பாக, ஃபவுல் ஏதேனும் நடந்தால் அதையும் VAR இனி கண்காணித்து நடுவருக்குத் தெரிவிக்கும். தவறான அடையாளத்தின் காரணமாக வேறு வீரருக்கு கார்டு வழங்கப்பட்டாலோ அல்லது இரண்டாவது எல்லோ கார்டு  தவறாகக் கொடுக்கப்பட்டிருந்தாலோ VAR தலையிடலாம்.

    மருத்துவ சிகிச்சை மற்றும் இதர விதிகள்: மைதானத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெறும் வீரர்கள் ஆட்டமிழக்காமல் இருக்க தந்திரமாகச் செயல்படுவதைத் தடுக்க, சிகிச்சை முடிந்து மீண்டும் மைதானத்திற்குள் வர 1 நிமிடம் காத்திருக்க வேண்டும். கோல்கீப்பர்கள் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை விட்டு வெளியேறும் வீரர்களுக்கும், அதற்குத் தூண்டும் பயிற்சியாளர்களுக்கும் நேரடியாக ரெட் கார்டு வழங்கப்படும். அதிகப்படியான வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பாதியிலும் (Half) 3 நிமிடங்கள் ஹைட்ரேஷன் பிரேக்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டை மேலும் விறுவிறுப்பாகவும், நேர்மையாகவும் மாற்றுவதற்காக இந்த அதிரடி மாற்றங்களை ஃபீஃபா மேற்கொண்டுள்ளது.

    FIFA introduces multiple New Rules No covering mouths punishments VAR reviews World Cup 2026
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!
    Next Article பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    June 10, 2026

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    June 10, 2026

    48 அணிகள் மோதுகின்றன – நாளை தொடங்குகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    48 அணிகள் மோதுகின்றன – நாளை தொடங்குகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.