Close Menu
    What's Hot

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!
    Featured

    இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!

    editor5By editor5June 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த இளம் பெண்ணை அவரது சகோதார் கொலை செய்ததும், அதற்கு அவரது தாய் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கயத்தார் தாலுகாவில் உள்ள தெற்குமயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அபிசெல்வி மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அவரது சகோதரர் சிவஞானம் கொலை செய்ததாகவும், தாய் எஸ்தர் பாலின் உடந்தையுடன் நடந்ததாகவும் போலீசார் விசாரணையில் கண்டறிந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

    அபிசெல்வி கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வாயிலாக தீவிர காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இந்த உறவு குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது. அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் இக்காதலை கடுமையாக எதிர்த்தனர். குடும்ப அழுத்தத்தால் மனமுடைந்த அபிசெல்வி, அப்போது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், குடும்பத்தின் தடையை மீறி அவர் ஹரி பிரசாத்துடன் தொடர்பைத் தொடர்ந்து வைத்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, அபிசெல்வி தனது செல்போனில் ஹரி பிரசாத்துடன் பேசிக் கொண்டிருந்ததை அண்ணன் சிவஞானம் பார்த்து கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவஞானம் தங்கையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அபிசெல்வியின் மன உளைச்சலை அதிகப்படுத்தியது. அதன் பிறகு, வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்த அபிசெல்வி, பின்னர் அறைக்குள் சென்று சீலிங் ஃபேனில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த கயத்தார் போலீசார் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் பல இடங்களில் காயங்கள் மற்றும் தாக்கப்பட்ட அறிகுறிகள் இருந்ததை அடுத்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். விரிவான விசாரணையில், அபிசெல்வியை சகோதரர் சிவஞானம் தாக்கிக் கொலை செய்ததும், தாய் எஸ்தர் பாலும் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம் பெண்ணின் இன்ஸ்டாகிராம் காதலை ஏற்க மறுத்த குடும்பத்தின் செயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடக காதல்கள் மற்றும் குடும்ப அங்கீகாரம் சார்ந்த பிரச்னைகள் இன்றும் பல இளைஞர்களை பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்கின்றனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூன் 24-இல் கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!.
    Next Article ”ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை…இதற்குத்தான் ‘சிங்கப்பெண்’ படையா முதல்வரே?”
    editor5

    Related Posts

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    June 11, 2026

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    June 11, 2026

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.