Close Menu
    What's Hot

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
    Featured

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    Editor web2By Editor web2June 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
    மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.

    சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?

    “அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ? சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் முதல்வரே.

    பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி எம்.எலே-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த எம்.எல்.ஏ-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!
    Next Article ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!
    Editor web2
    • Website

    Related Posts

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    July 28, 2026

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    July 28, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.