Close Menu
    What's Hot

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு
    அரசியல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    Editor web2By Editor web2June 11, 2026Updated:June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Praveen charavarthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.சண்முகம் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
    Next Article பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்
    Editor web2
    • Website

    Related Posts

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    June 11, 2026

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    June 11, 2026

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.