Close Menu
    What's Hot

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!
    தமிழ்நாடு

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    Editor web4By Editor web4June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொன்னேரி அருகே இருவேறு கிராமங்களில் 2வீடுகளின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு சென்று விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பி விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

    இன்று காலை இவரது வீடு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 15000 ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதே போல அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா என்பவர் தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகை, வெள்ளி மற்றும் பித்தளை பூஜை பொருட்கள், 5000ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

    இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!
    Next Article கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!
    Editor web4

    Related Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    June 12, 2026

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.