Close Menu
    What's Hot

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!
    Featured

    யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    editor5By editor5June 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 41 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் மீது உள்ள பொறாமையால் எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், கட்சியின் முதல் இடைத்தேர்தல் சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் அமோக வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கிலிருந்து ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அரசியலுக்கு வருவது குறித்து தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்ட அவர், ஜூன் 11-ம் தேதி முடிவை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள் மறைவைத் தொடர்ந்து அறிவிப்பை ஒரு நாள் ஒத்திவைத்தார்.

    ஜூன் 12-ம் தேதி சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு, அரசியலில் இறங்கலாமா என்பது குறித்து பொதுமக்களின் ஆலோசனையை நாடினார். இன்று நிருபர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், “நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என நீண்ட நேரம் யோசித்தேன். என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிக்க உள்ளேன்” என்றார். மேலும், “என் ரசிகர்களை அழைத்து, என் தாயை மேடையேற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறினார்.

    புதிய அரசுக்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது உரிமையாளர் சாவி கொடுத்து அனுப்புவார். உள்ளே சென்ற பிறகுதான் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் தெரியவரும். அதுபோல், மக்கள் நம்பி ஒப்படைத்துள்ள புதிய அரசுக்கு அவகாசம் தர வேண்டும் என்றார். “புதிதாக ஒருவர் வந்தால் தெரு நாய்கள் குரைக்கும். சிலவற்றுக்கு பிஸ்கட், சிலவற்றுக்கு பிரியாணி கொடுத்து அடக்க வேண்டும். ஒரு நாய்க்கே இவ்வளவு என்றால், நாட்டை நிர்வகிப்பவருக்கு நிச்சயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்ற ராகவா லாரன்ஸின் ஒப்பீடு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பல்வேறு அரசியல் தரப்பினரும் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் விஜய் மீது தொடுக்கும் விமர்சனங்கள் பொறாமையால் ஏற்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக வெற்றிக் கழக அரசு பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், ராகவா லாரன்ஸின் முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவரது அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மிகுந்த பரபரப்புடன் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுவதா? ராகுலுக்கு கண்டனம்
    Next Article பெங்களூரு: கையில் துடைப்பதுடன்.. துய்மைப் பணியில் இறங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!
    editor5

    Related Posts

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    June 14, 2026

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    June 14, 2026

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    அணு ஆயுத நாடாக நீடிப்பதில் வடகொரியா மீண்டும் உறுதி: சர்வதேச அழுத்தங்களுக்கு மறுப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.