Close Menu
    What's Hot

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!
    Featured

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    Editor web3By Editor web3June 15, 2026Updated:June 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kanimozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு மதபோதகரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, தற்போதைய தவெக அரசை, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் தளப் பதிவில், தூத்துக்குடி ஆனந்த நகர் தேவாலயத்தில் மதபோதகர் அருள்ராஜ் என்பவரால் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கனிமொழி தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எங்குமே பாதுகாப்பில்லை என்னும் அச்சம் கலந்த சூழல் உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தவெக அரசு தங்களின் சுய விளம்பரத்திற்காக மட்டுமே செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்பு கொள்ள தனியாக எந்தவொரு அவசர உதவி எண்ணும் கூட இல்லாத ஒரு ‘சிறப்பு படை’யை உருவாக்கி, இந்த அரசு மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    எந்தவொரு சட்டப்பூர்வமான சிறப்பு அதிகாரமும் இல்லாத இப்படிப்பட்ட ஒரு ‘சிறப்பு படை’யால் பெண்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே பெண்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள ‘181’ அவசர எண்ணும், தேசிய அளவில் பல காலமாகச் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான ‘1098’ உதவி எண்ணும் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தில் எதற்காகத் தனியாக ஒரு விளம்பர ‘சிறப்பு படை’யை உருவாக்க வேண்டும்?” என்று காரசாரமாகக் கேட்டுள்ளார்.

    'Special Force' Church Kanimozhi Kanimozhi M.P. Religious preacher tuticorin Sexual harassment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?
    Next Article அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது!. உதயநிதி காட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    June 15, 2026

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    June 15, 2026

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.