Close Menu
    What's Hot

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!
    தமிழ்நாடு

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 pdy airport B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி விமான நிலையத்திற்கு நடப்பாண்டில் முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வருகை தந்துள்ளதாக, விமான நிலைய இயக்குனர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார்.

    விமான நிலைய விரிவாக்கம் 2030க்குள் முடிவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு பயணிகள் சேவை இன்று நடைபெற்றது.

    புதுச்சேரி விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் இன்று காலை விமான நிறுவன ஊழியர்கள், காவல்துறை மற்றும் பிற விமான நிலைய பணியாளர்கள் உள்ளிட்ட இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் இணைந்து “வந்தே மாதரம்” என்ற தேசியப் பாடலைப் பாடினார்கள்.

    012 pdy airport A

    தொடர்ந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு  பாரம்பரிய திலகம் மற்றும் ரோஜா பூக்களை கொண்டு வரவேற்பு அளித்தனர். மேலும்  சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்டில் பயணிகளும் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும் போது, புதுச்சேரி விமான நிலையம் 1989ம் ஆண்டு திறக்கப்பட்டு, 37 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகள் விமான வருகையின்றி மூடப்பட்டிருந்தது. தற்போது 1,500 மீட்டர் ஓடுபாதை மட்டுமே உள்ளதால், 72 பேர் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே வந்து செல்கின்றன. போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்வால், பெங்களூரு, ஹைதராபாத்திற்கு இயங்கி வந்த 3 விமானங்களில் ஒரு விமானம் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

    012 pdy airport

    இருப்பினும் கடந்த 2025-2026ம் நிதி ஆண்டில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வந்துள்ளனர்.

    மேலும்  விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்தால் 200க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் பெரிய ரக விமானங்கள் வரும். பல மாநிலங்களுக்கு விமான சேவையும் விரிவடையும். இதன் மூலம் அதிகளவு வருவாய் விமான நிலையத்திற்கு கிடைக்கும். வரும் 2027ம் ஆண்டு விரிவாக்க பணி தொடங்கி 2030ம் ஆண்டில் 2,300 மீட்டர் புதிய விமான ஓடுபாதை பயன்பாட்டிற்கு வரும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!
    Next Article திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!
    Editor TN Talks

    Related Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    June 19, 2026

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.