திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2 மாத பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்காக பெற்ற தாயே விற்றதும், சினிமா பாணியில் கைமாறிய குழந்தையை நாமக்கலில் போலீசார் மீட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு , தரைகாடு பகுதியை சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான ஷபீர். இவரது மனைவி ஜபீனா திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஜபீனாவை ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு காயிதேமில்லத் தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான அயூப் மகன் ரஷித் அஹ்மத் என்பவர் அணுகி, நீயே பிச்சை எடுத்து கஷ்டப்பட்டு வருகிறாய். அதனால் உன்னுடைய குழந்தையை என்னிடம் கொடுத்து விடு அதற்கு உனக்கு பணம் தருகிறேன்’ எனக்கூறி சம்மதிக்க வைத்துள்ளார்.
பின்னர், கடந்த மாதம் 20ம் தேதி நரியம்பட்டில் ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அந்த பெண் குழந்தையை வாங்கி உள்ளார். அந்த பெண்ணும் தனக்கு பணம் கிடைத்தவுடன் அந்த குழந்தையை விற்றுள்ளார். பின்னர் ரஷித் அஹ்மத் அந்த குழந்தையை வேலூரில் உள்ள புகழேந்தி என்பவருக்கு அதிக விலைக்கு விற்றதாக தெரிகிறது. மேலும் ஷபீர் தனது குழந்தை பற்றி ஜபீனாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு குழந்தையுடன் வந்தால் என்னுடன் வாழ முடியும். இல்லாவிட்டால் சென்று விடு என மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் ஜபீனா மீண்டும் ரஷீத்தை அணுகி தனது குழந்தையை தந்து விடுமாறும் பணத்தை திருப்பிதருவதாகவும் கூறி உள்ளார். ஆனால், ரஷீத் பல நாட்க ளாகியும் குழந்தையை தராமல் அலைகழித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜபீனா குழந்தையை மீட்டு தரும்படி உம்ராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் எஸ்பி அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில், போலீசார் தீவிரமாக அந்த பெண் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுகபிரியா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
அதன்பேரில் குழந்தையை விற்றதாக ஜபீனா, பணம் கொடுத்து வாங்கி விற்று இடைத்தரகராக வேலை செய்த ரஷித் அஹ்மத் ஆகிய இருவரையும் போலிசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த பெண் குழந்தையை மீட் கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு தம்பதிக்கு அந்த குழந்தை விற்கபட் டது தெரியவந்து போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு சதீஷ்குமார், ஹரிணி தம்பதியிடம் இருந்த அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், இது தொடர் பாசு இதில் மூளையாக செயல்பட்ட ஆம்பூரை சேர்ந்த கார் டிரைவரான வேலூரில் தற்போது வசித்து வரும் புகழேந்தி(41), ஈரோடு அடுத்த பெருந்துறையை சேர்ந்த யுவராஜ் மனைவி உமா மகேஸ்வரி(42) ஆகியோர் நேற்று மாலை உம்ராபாத் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வந்த எஸ்பி அக்ஷய் அனில் வாகரே விசாரணை மேற்கொண்டார் தொடர்ந்து குழந்தை கடத்தல், விற்பனை ஆகியவற்றில்ஈடுபட்டதாக உமா மகேஸ்வரி, புகழேந்தி, சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஹரிணி ஆகி யோரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின அதில் ஆம்பூரில் கட்டிட மேஸ்திரியாக பணி புரிந்து வந்த ரஷீத் அஹ்மத் என்பவர் கார் டிரைவரான வேலூர் வசந்தபுரத்தில் வசித்து வரும் புகழேந்தி (41) என்பவருடன் நட்பில் இருந்துள்ளார். புகழேந்தி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வட்டகாரபாளையம் அருகே அய்யன் தோட்டத்தை சேர்ந்த யுவராஜ் மனைவி உமாமகேஸ்வரி(42) என்பவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரியின் உறவினரான திருமண புரோக்கராக உள்ள ரமேஷ் என்பவர் தனக்கு தெரிந்த ஒரு தம்பதி கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாமல் தவித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷீத் அஹ்மத் தான் குழந்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.50 ஆயிரத்திற்கு ஜபீனாவின் குழந்தையை வாங்கி புகழேந்தி மூலம் உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார்.
உமா மகேஸ்வரியின் உறவினரான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த அலாவுதீன் என்பவரது மூலமாக அந்த தம்பதியரிடம் குழந்தை பற்றி பேசி உள்ளனர். அதற்காக வியாபாரம் பேசி தம்பதியிடம் ரூ.13 லட்சத்தை அலாவுதீன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. பின்னர், அந்த குழந்தை சதீஷ்குமார் தம்ப தியிடம் ஒப்படைக்கபட் டுள்ளது. பின்னர், அந்த குழந்தையின் இருப்பிடம் அறிந்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். இதில் தொடர்புடைய உமா மகேஸ்வரி, புகழேந்தி, தம்பதி உள்ளிட்ட நான்கு பேர் உட் பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய் துள்ளனர் மேலும், பணம் பெற்று மூளையாக செயல்பட்ட அலாவுதீனையும் போலீசார் மடக்கி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
