Close Menu
    What's Hot

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
    தமிழ்நாடு

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    Editor web2By Editor web2June 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையதாக கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.

    இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?

    பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?

    தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!
    Next Article நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!
    Editor web2
    • Website

    Related Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    June 19, 2026

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.