Close Menu
    What's Hot

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபிஃபா அப்டேட் : ஜோர்டனை வீழ்த்தி ஆஸ்திரியா அசத்தல் வெற்றி..!
    விளையாட்டு

    ஃபிஃபா அப்டேட் : ஜோர்டனை வீழ்த்தி ஆஸ்திரியா அசத்தல் வெற்றி..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    48 அணிகள் பங்கேற்றுள்ள 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30மணிக்கு நடைபெற்ற ’ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆக்ரோஷமாக விளையாடிய ஆஸ்திரியா அணியினர், 21-வது நிமிடங்களில் ரோமானோ ஷ்மிட் அடித்த முதல் கோலால் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவில் எவ்வளவோ முயன்றும் ஜோர்டான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜோர்டான் அணிக்கு 50-வது நிமிடத்தில் அலி ஓல்வான் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்தார். ஆனால், வீடியோ பரிசோதனைக்கு பிறகு அது ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோல் செல்லாமல் போக ஆஸ்திரிய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    பின்னர் 76-வது நிமிடத்தில் ஜோர்டான் வீரர் யாசன் அல்-அரப் துரதிர்ஷ்டவசமாக ஓன் கோல் அடித்ததால், ஆஸ்திரியா 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. இதையடுத்து சமநிலை கோலுக்காக ஜோர்டான் அணியும், மேலும் ஒரு கோலுக்காக ஆஸ்திரியாவும் கடுமையாக போராடின. அப்போது ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஆஸ்திரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற வைத்தார்.

    இறுதியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, 3 புள்ளிகளை கைப்பற்றி ‘ஜெ’ பிரிவில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. மெஸ்சியின் ஹாட்ரிக் கோலுடன் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.

    2026 FIFA World Cup Austria FIFA jordan ஆஸ்திரியா ஃபிபா உலகக் கோப்பை ஜோர்டான்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்துத் துறை விளக்கம்
    Next Article 200 சர்வதேசப் போட்டிகள், 6 உலகக் கோப்பைகள்!. மெஸ்ஸியின் வியக்கவைக்கும் சாதனைகள்!
    Editor web4

    Related Posts

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    June 21, 2026

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.