Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு
    தமிழ்நாடு

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    Editor web2By Editor web2June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 17 12h34m37s050
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாநகராட்சியில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை அரங்கில் வைப்பது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதிமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகராட்சியின் சாதாரண மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் விக்டோரியா ஹால் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியபோது அரங்கில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் அரங்கில் வைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதேநேரத்தில், பெருந்தலைவர் காமராஜரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் எதிராக முழக்கமிட்டதால் கூட்ட அரங்கில் பதற்றமான சூழல் நிலவியது.

    vlcsnap 2026 06 17 12h34m45s675

    சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்திற்குப் பிறகு, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலையிட்டு, அரசாணையின்படி முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை வைக்க அனுமதி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் புகைப்படம் மேயரின் மேசை அருகே வைக்கப்பட்டது.

    இதற்கிடையில், காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபாலன், காமராஜரை அவமதிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், இந்த விவகாரத்தை கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக தெரிவித்தார்.

    மறுபுறம், மாநகராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணிகள் மற்றும் குப்பை அகற்றும் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும், மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இதனால் கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் முழுவதும் அரசியல் மோதல் மற்றும் குற்றச்சாட்டுகளால் பரபரப்பாக நடைபெற்றது.

    AIADMKProtest CoimbatoreCorporation DMKvsCongress
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!
    Next Article மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.
    Editor web2
    • Website

    Related Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.