Close Menu
    What's Hot

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்நாட்டின் முழுமுதல் வில்லன் பிரதமர் மோடி – வைகோ கடும்தாக்கு
    Featured

    தமிழ்நாட்டின் முழுமுதல் வில்லன் பிரதமர் மோடி – வைகோ கடும்தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 mdmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க மாநில அரசு உடனடியாகத் திட்டம் வகுக்க வேண்டும்எனக் கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் என் வலியுறுத்தியுள்ளார்.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் ஓடைப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அப்போது அரிவாளைக் கொண்டு மரங்களை வெட்டினார். தொடர்ந்து மரம் அறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியவர், தொடர்ண்டு ஜேசிபியை இயக்கி கருவேல மரத்தை வேரோடு அப்புறப்படுத்தினார்.

    009 mdmk B

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது;-

    விமானத்தில் கொண்டு வரப்பட்டு தூவப்பட்ட வேலிக்காத்தான் விதைகளால், இன்று தமிழகமே படுநாசம் ஆகிவிட்டது. நாட்டு கருவேல மரங்களை இதோடு ஒப்பிடக்கூடாது.

    காற்றில் உள்ள பிராண வாயுவை உறிஞ்சி, கரியமில வாயுவை உமிழும் இந்த சீமைக்கருவேல மரங்கள் 50 முதல் 100 அடி வரை நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடியவை. இதில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு மாடுகள் இதன் நிழலில் நின்றால் சினை பிடிக்காது. இத்தகைய பிசாசுச் செடியை அகற்ற வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், உள்ளிட்ட அனைவருமே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

    இந்த மரங்களை வெட்டினால் மீண்டும் முளைத்துவிடும் என்பதால் ஜேசிபி இயந்திரம் கொண்டு வேரோடு அகற்ற வேண்டும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் அரசு இயந்திரங்கள் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்;அதற்கான திட்டத்தை மாநில அரசு வகுக்க வேண்டும்.

    மதிமுக என்பது வெறும் தேர்தலுக்காக ஓட்டு வாங்கும் கட்சி அல்ல; தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றும் கட்சி. முல்லைப் பெரியாறு அணை விவகாரம், நாசகார நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் எனப் பல பிரச்சனைகளில் தமிழக மக்களின் நலன் காக்கக் களத்தில் நின்றது மதிமுக தான். ஆனால், நாங்கள் முன்னெடுக்கும் இத்தகைய வாழ்வாதாரப் போராட்டங்களைச் செய்தித் தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிடுவதில்லை; மாலை நேரங்களில் அரசியல் விவாதங்களை மட்டுமே நடத்துகின்றன.

    009 mdmk A

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், நேற்றைய தினம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அதற்கெதிராக ஒருமித்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

    ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், இது மட்டுமே கர்நாடகாவைத் தடுத்து நிறுத்திவிடாது. கர்நாடகாவிற்குப் பின்புலமாக இருந்து மேகதாது அணை கட்டத் தூண்டுவதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான்.

    தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்யும் நரேந்திர மோடி சர்க்காரை நான் முழுமுதல் வில்லன் என்று குற்றம் சாட்டுகிறேன். 1965-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தின்போது மக்கள் எவ்வாறு கொந்தளித்து எழுந்தார்களோ, அதேபோன்று ஜாதி, மதம், கட்சி பேதமின்றி மாணவர்களும், இளைஞர்களும் ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அப்போதுதான் மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த முடியும் என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

    MDMK Narendra Modi Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!
    Next Article பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனை..!! பிரகதி பாத யாத்திரையில் புதுவை துணைநிலை ஆளுநர் பயணம்..!!
    Editor TN Talks

    Related Posts

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    June 20, 2026

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    ‘பூர்வோதய’ பாதையில் வடகிழக்கின் வளர்ச்சி..!! ஒடிசாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    கட்டண தகராறு!. சுங்கச்சாவடி ஊழியரை 12 கி.மீ இழுத்து சென்ற கார்!. மே.வங்கத்தில் அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.