Close Menu
    What's Hot

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!
    தமிழ்நாடு

    விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    virudhunagar accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் மீது டிப்பர் லாரி மோதிய பயங்கர விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். அவர்களைத் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வில்சன், சாந்தமேரி, நிர்மலா மற்றும் அந்தோணி முத்து ஆகிய 4 பேரும், சிவகாசியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றுள்ளனர்.

    விருதுநகர் சத்திரரெட்டியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி, காரின் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் வலதுபுறம் இருந்த மையத் தடுப்பிற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி இரு பக்கமும் பலமாக நசுக்கப்பட்டதில், சொகுசு கார் முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கியது.

    விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் இடுபாடுகளில்  சிக்கியிருந்தவர்களை சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

    பலத்த காயமடைந்த அவர்கள் நால்வரும் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    accident car - lorry accident Car crushed Four people rescued virudhunagar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!
    Next Article மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்
    Editor web3
    • Website

    Related Posts

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    June 22, 2026

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    June 22, 2026

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.