Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!
    தமிழ்நாடு

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    Editor web4By Editor web4June 22, 2026Updated:June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று காலை அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தில் வேலைப்பார்த்த சுமார் 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அமோனியா வாயு கசிவை சுவாசித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    ”12 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்கள் என்று அதிர்ச்சி அடைகிறோம். இந்த வாயுனால் கழுத்து பகுதிகள் உடம்பு பின்புறம் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தீவிரமான சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வட இந்திய மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சார்ந்த நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தொழிற்சாலை அருகே அந்த நபர்களை தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தொழிற்சாலைக்குள்ளையே தங்க வந்துள்ளனர். அது முற்றிலும் தவறு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போதுமான இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படவில்லை

    இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடாக இருக்காது. இளம் பெண்கள் தான் தொழிலாளியாக உள்ளனர். இது போன்ற தொழில் சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்.

    அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இன்னும் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல பேர் செயற்கை சுவாசத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்கள். உயிர் இழப்ப எண்ணிக்கை உயரக்கூடாது.
    தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    முறையாக நிறுவனங்கள் செயல்படுகிறதா என்று குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் தங்க வைப்பது குற்றம் அது சட்டத்திற்கு எதிரானது. நிறுவனத்தை முறையாக நடத்தி இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்
    Next Article மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!
    Editor web4

    Related Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    June 22, 2026

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    June 22, 2026

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.