Close Menu
    What's Hot

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!
    Featured

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    Editor web3By Editor web3August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Minister K.N. Nehru
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நிர்வாகப் பொறுப்பில் உள்ள இரண்டு நிறுவனங்களில், கடந்த 2018ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.

    இந்த ஆவணங்களை, 2013-14 முதல் 2015-16 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் கே.என்.நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளுடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, அந்தக் காலக்கட்டத்தில் 17 கோடி ரூபாய் வருமானமும், 11 கோடி ரூபாய் முதலீடும் முறையாகக் கணக்கில் காட்டப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. இதைக் கணக்கில் சேர்த்து மதிப்பீடு செய்யுமாறு கடந்த 2019ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஆணையர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கணக்கில் காட்டப்படாததாகக் கூறப்பட்ட தொகைக்கும் அந்த நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

    Chennai High Court dmk nehru former Minister K.N. Nehru K.N.Nehru
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
    Next Article பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!
    Editor web3
    • Website

    Related Posts

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    August 7, 2026

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    August 7, 2026

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.