Close Menu
    What's Hot

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
    தமிழ்நாடு

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    Editor web3By Editor web3August 7, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 MODI A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

    கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும். இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள். தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன். இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது.

    2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது.

    பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும். மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன. இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும்.

    இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும். எனவே, இப்பொருண்மை குறித்து இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவே அனுமதிக்க வேண்டும். மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Letter No NEET exam prime minister tn cm vijay veterinary courses
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.
    Next Article  முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    August 7, 2026

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    August 7, 2026

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.