வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு, கடந்த 21-ம் தேதி மீண்டும் நாடு முழுவதும் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் நீட் மறுதேர்விலும் பல முறைகேடுகளுக்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. பயோமெட்ரிக் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட சில ஊழியர்கள், போலி தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து, சரிபார்ப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தது.
பணியில் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தது. இத்தகைய 18 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். லக்கிசாரையில், பதிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் பங்கேற்ற 9 பேர் பிடிபட்டனர். கயா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த அங்கித் ராஜ் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இதேப் போல் முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் சாட்ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்ட போலி நீட் வினாத்தாள்களை இன்ஸ்டா வழியாக ரூ.50 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். போலியான நீட் தேர்வு வினாத்தாள்களை விற்று ஏமாற்றியதாக 20 மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் அவர் ரூ.30,000 சம்பாதித்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
