Close Menu
    What's Hot

    15 புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டில் புதிய மாற்றம்.. முதல்வர் விஜய் வாழ்த்து!!

    திமுக புறக்கணிப்பு; அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது!. மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி!

    போன் செய்து மிரட்டும் வசூல் ஏஜென்ட்களுக்கு செக்.. ஆர்பிஐ புதிய விதிகள்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தி.மலை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! கண்ணாடியில் கேமரா.. வசமாக சிக்கிய இருவர்..!!
    Featured

    தி.மலை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! கண்ணாடியில் கேமரா.. வசமாக சிக்கிய இருவர்..!!

    editor5By editor5August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாப்பு குறித்த கவலைகள் தற்போது அதிகரித்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பழமையான ஆலயத்தில், கடந்த இரு நாட்களுக்கு முன் ஐந்தாம் பிரகாரத்திலிருந்து ஒரு லாரி மர்மமான முறையில் காணாமல் போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

    கோயில் ஊழியர்கள் அனைத்து சாவிகளையும் பூட்டி வைத்திருந்த நிலையிலும், யாருடைய கண்ணிலும் படாமல் அந்நபர் உள்ளே நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் இன்று மேலும் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரமண மகரிஷி ஆசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரவுள்ள நிலையில், பவுனேஷ் மற்றும் மகேஷ் என்ற இரு நபர்கள் கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி (ரேபான் ஸ்மார்ட் கிளாஸ் ஏஐ கேமரா) அணிந்து கோயிலுக்குள் நுழைந்தனர்.

    அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளை புகைப்படம் எடுக்க முயன்றதாகக் கூறப்படும் இவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அவர்களிடம் கேமரா கண்ணாடி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து, புகைப்படம் எடுக்க வந்தார்களா அல்லது வேறு நோக்கமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் வருகையை முன்னிட்டு கோயில் சுற்றுப்புறம், ஹெலிபேடு மற்றும் பயண வழிகளில் ட்ரோன், ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்பட்ட சம்பவம், பாதுகாப்பில் உள்ள இடைவெளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது சாதாரண நிகழ்வா அல்லது வேறு எண்ணத்துடன் நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோயில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    arunachaleswarar temple camera glasses tiruvannamalai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசவுதியை சுற்றி புதிய பதற்றம்! பாகிஸ்தான் – துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி கருத்து!!
    Next Article மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??
    editor5

    Related Posts

    15 புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டில் புதிய மாற்றம்.. முதல்வர் விஜய் வாழ்த்து!!

    August 8, 2026

    திமுக புறக்கணிப்பு; அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது!. மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி!

    August 8, 2026

    போன் செய்து மிரட்டும் வசூல் ஏஜென்ட்களுக்கு செக்.. ஆர்பிஐ புதிய விதிகள்!!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    15 புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டில் புதிய மாற்றம்.. முதல்வர் விஜய் வாழ்த்து!!

    திமுக புறக்கணிப்பு; அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது!. மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி!

    போன் செய்து மிரட்டும் வசூல் ஏஜென்ட்களுக்கு செக்.. ஆர்பிஐ புதிய விதிகள்!!

    “தவெக அரசு நடத்தும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது”!. கனிமொழி எம்.பி. திட்டவட்டம்!

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.