Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. நார்வே, அல்ஜீரியா அணிகள் அபார வெற்றி!

    Evils, Evils என்று Devils பேசக்கூடாது..!! சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த தரமான செய்கை..!!

    ‘உங்க அப்பாவே காணோம்!’ – சட்டசபையில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»கத்தார் : எரிவாயு ஆலையில் விபத்து..! 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!
    உலகம்

    கத்தார் : எரிவாயு ஆலையில் விபத்து..! 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!

    Editor web4By Editor web4June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வளைகுடா நாடுகள், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இதனால், அந்த நாடுகளையும் ஈரான் தாக்கியது.

    அதில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதிப்பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனால் பதற்றம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து, கத்தார் அரசு தனது மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கி, உற்பத்தியை தொடங்க திட்டமிட்டது.

    இதற்காக, ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் அங்குள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    66 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியுடன் மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleCHATGPT மூலம் போலி நீட் வினாத்தாள்..! இன்ஸ்டாவில் விற்பனை..! சட்டக்கல்லூரி மாணவர் கைது..!
    Next Article நிறைமாத நிலவே வா.. வா..!! விஜய் டிவி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!! குவியும் வாழ்த்துகள்..!!
    Editor web4

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. நார்வே, அல்ஜீரியா அணிகள் அபார வெற்றி!

    June 23, 2026

    Evils, Evils என்று Devils பேசக்கூடாது..!! சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த தரமான செய்கை..!!

    June 23, 2026

    ‘உங்க அப்பாவே காணோம்!’ – சட்டசபையில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. நார்வே, அல்ஜீரியா அணிகள் அபார வெற்றி!

    Evils, Evils என்று Devils பேசக்கூடாது..!! சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த தரமான செய்கை..!!

    ‘உங்க அப்பாவே காணோம்!’ – சட்டசபையில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!

    சரித்திர பக்கங்களில் அழியாத ஜூன் 23!. தல தோனி எழுதிய ‘சகாப்தம்!

    மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்..!! சட்டசபையில் முதல்வர் விஜய் தெறி பேச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.