Close Menu
    What's Hot

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்
    Featured

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 minister A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுவெளியில் பள்ளி மாணவிகளை கால்களைத் தடவியதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது விளக்கத்தில் கூறியிருப்பதாவது;-

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” (விஜய் – ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்ப்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகமான செயலாகும்.

    009 minister

    தமிழகத்தில்60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவுகட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பதிவு அமைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த போது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்த துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    anbil mahesh dmk it wing Minister Viswanathan Viswanathan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅருணாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு: வெள்ளம் – நிலச்சரிவு; மூன்று பேர் மாயம்..!!
    Next Article ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?
    Editor TN Talks

    Related Posts

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    June 24, 2026

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    June 24, 2026

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.