Close Menu
    What's Hot

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!
    Featured

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 cinema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின்  எடிட்டர் பிரதீப் ராகவ் என்பது திரைத்துறையில் ஜெர்க்கை ஏற்படுத்தி இருக்கிறது.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு தர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

    படத்தின் தலைப்பு அறிமுக விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், தர்மன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது கோலிவுட்டில் ஜெர்க்கை ஏற்படுத்தி இருக்கிறது.

    முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகராக இருந்தபோது நடித்த ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், முழுப் படமும் இணையதளங்களில் வெளியானது. இதற்கு காரணம் இந்தப் படத்தின் எடிட்டராக இருந்த பிரதீப் ராகவின் உதவியாளர்தான் எனக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    அதே நேரம், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு, பிரதீப்ராகவும் பொறுப்பு எனக் கருதி, திரைப்படங்களில் எடிட்டராக அவர் பணிபுரிய தடைவிதிக்கப்பட்டதோடு, அவர்  உறுப்பினராக இருக்கும் தென்னிந்திய சினிமா எடிட்டர்கள் சங்கத்திலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்தார்.

    இந்தநிலையில்தான் பிரதீப் ராகவ் சங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து தான் பணிபுரிய ஆவண செய்ய கேட்டிருந்தார். இதை பரிசீலித்த சங்கம் அவர் மீதான தடையை ரத்து செய்து ஒழுங்கு நடவடிக்கையையும் வாபஸ் பெற்றது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் எடிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அஸ்வத் மாரிமுத்து முன்னதாக இயக்கிய ட்ராகன் படத்தின் எடிட்டரும் இவர்தான் என்பதால், மீண்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஜனநாயகனுக்கு நேர்ந்த கதி தர்மனுக்கும் ஏற்பட்டு விடுமா என திரைத்துறையினர் ஐயம் எழுப்புகின்றனர்.

    Dharman Movie Movie Editor Rajinikanth Thalaivar 173
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!
    Next Article பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்
    Editor TN Talks

    Related Posts

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    June 25, 2026

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.