Close Menu
    What's Hot

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
    Featured

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    Editor web1By Editor web1June 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 25 at 6.20.04 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பவே மின்சாரத்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று (ஜூன் 25) வெளியிட்டார். அதில், முந்திய திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் நிர்வாக முறைகேடு, நிதி மேலாண்மையில் நிகழ்ந்த தவறுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அமைச்சர் தெரிவித்தார். இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் நிர்மல்குமாரின் வெள்ளை அறிக்கை குறித்து விளக்கமளித்து, மறுப்பு தெரிவித்தார்.

    மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பவே மின்சாரத்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும்,  மின்வாரியத்தில் செலவு உயர்ந்ததற்கான காரணம் வெள்ளை அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திமுக ஆட்சியில் புதிய மின்திட்டங்கள் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்த போது மின்வாரியத்தின் கடன் சுமை ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்ததாகவும், மின் உற்பத்தியை அதிகரிக்க திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் கடன் 9.5%-க்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    திமுக ஆட்சியில் மின்வாரியத்தின் வருவாய் அதிகரித்ததாக குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்த போதிலும், திமுக ஆட்சியில் தடையில்லாமல் மின்விநியோகம் செய்யப்பட்டது. திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டிய செந்தில் பாலாஜி, மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் வந்ததால், அப்போது வழங்க முடியாததையடுத்து, தற்போது தவெக அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக ஆட்சி அமைந்த 40 நாட்களுக்குள் 401 பேருக்கு பணி நியமனம் செய்ய முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    முந்தைய அதிமுக ஆட்சியில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்த செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டும், வருவாய் பற்றாக்குறை ரூ.58,000 கோடியாக இருந்ததாகவும், திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.34,000 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டியாக மின்வாரியம் செலுத்தியது நிலையில், அது, திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக வட்டி கட்டவில்லை என்றார்.

    #TNEB #TNEBMinister #Senthilbalaji #EBWhiteReport
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்
    Next Article எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    June 25, 2026

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    June 25, 2026

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.