Close Menu
    What's Hot

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு
    Featured

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    Editor web1By Editor web1June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 25 at 9.53.26 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை பழிவாங்கல் நடவடிக்கையே என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை திமுக கொறடாவுமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2006- 2011 வரை எ.வ.வேலு அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 2022ம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.  இதனிடையே எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை பழிவாங்கல் நடவடிக்கையே என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திமுக மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்குமாறு முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியதால் சோதனை நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சோதனைகளால் அஞ்சுவோம் என தவெக அரசு நினைப்பதாகவும், ரூ.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது உண்மைக்கு மாறானது என்றும் கரூர் நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?
    Editor web1
    • Website

    Related Posts

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    June 25, 2026

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    June 25, 2026

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.