Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இஸ்லாமை தழுவியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து சமூகநீதிக்கு எதிரானது – பேராசிரியர் ஜவாஹிருல்லா அதிருப்தி
    Featured

    இஸ்லாமை தழுவியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து சமூகநீதிக்கு எதிரானது – பேராசிரியர் ஜவாஹிருல்லா அதிருப்தி

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 jawahirulla
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம்  சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் வருத்தமளிக்கும் தீர்ப்பாகும்.

    தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகளின் அடிப்படையில் தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞர் 2007ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 3.5% இடஒதுக்கீடு வழங்கினார்.

    தமிழ்நாட்டில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) அந்தஸ்து வழங்கலாம் என்பதை பல தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

    மேலும் கடந்த மார்ச் 9, 2024-ல் வெளியிடப்பட்ட அரசாணையின் உதவியால் தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் கிடைக்க   மு.க.ஸ்டாலின் ஆட்சி வழிவகுத்தது.

    மதம் மாறிய பிறகும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) என்ற உரிமை தொடரும் என்று இந்த அரசாணை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எம் எஸ் ரமேஷ் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த அக்டோபர் 25ல் தீர்ப்பு  வழங்கியது.

    அந்த தீர்ப்பில்,  பிசிஎம் அந்தஸ்து புதியதாக வழங்கப்பட்டது அல்ல; ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சமூகநீதிசார் உரிமை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

    மேலும், “பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்” என்பது தமிழ்நாடு சட்டம் 45/1994-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவு என்பதை நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. 

    இந்த நிலையில், இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு 3.5% பிசிஎம் இடஒதுக்கீட்டை செல்லாததாக்கும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் அணுகுமுறை, சமூக உண்மைகளையும் அரசியல் சட்டப் பாதுகாப்புகளையும் மறுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

    தமிழகம் என்பது பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய சமூகநீதி மண். இங்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறிப்பதற்கான எந்த முயற்சியும் மக்களால் ஏற்கப்படாது…

    எனவே, தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான  இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

    BCM Reservation Islam Converts Jawahirullah MMK Reservation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட வெனிசுலா..!! பீதியில் உறைந்த மக்கள்..!!
    Next Article ஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது நம் தமிழ் சினிமா..!! கமல்ஹாசன் உருக்கம்..!!
    Editor TN Talks

    Related Posts

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    June 27, 2026

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    June 27, 2026

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை..!! அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது என்ன..??

    முடிவுக்கு வந்தது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!! பாக்யராஜ் மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.