Close Menu
    What's Hot

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»FIFA UPDATE;  இங்கிலாந்து வரலாற்றில் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரராக ஹாரி கேன் சாதனை!
    Featured

    FIFA UPDATE;  இங்கிலாந்து வரலாற்றில் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரராக ஹாரி கேன் சாதனை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 football
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    குரூப் ‘எல்’ பிரிவின் கடைசி லீக் போட்டியில், பனாமாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்த ஹாரி கேன், உலகக்கோப்பை போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தி, இதற்கு முன் கேரி லினேக்கர் பெயரில் இருந்த 10 கோல்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

    முதல் பாதி கோல் இன்றி முடிந்த நிலையில், இரண்டாவது பாதியில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 62-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து 68-வது நிமிடத்தில் பெல்லிங்ஹாம் துல்லியமாக வழங்கிய கிராஸை ஹெடர் மூலம் கோலாக மாற்றிய ஹாரி கேன், அணியின் வெற்றியை உறுதி செய்ததுடன் புதிய சாதனையையும் படைத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் பயிற்சியாளர் தாமஸ் டுசெல் தலைமையிலான இங்கிலாந்து அணி, குரூப் ‘எல்’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. முன்னதாக குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற இங்கிலாந்து, கானாவுடன் கோல் இன்றி டிரா செய்திருந்தது.

    அடுத்ததாக நடைபெறும் 32 அணிகள் சுற்றில், இங்கிலாந்து அணி காங்கோ ஜனநாயகக் குடியரசு அணியை அட்லாண்டாவில் நடைபெறும் போட்டியில் எதிர்கொள்கிறது.

    ஹாரி கேன், இங்கிலாந்து அணிக்காக இதுவரை 117 போட்டிகளில் விளையாடி 82 கோல்கள் அடித்துள்ளார். மேலும், முக்கிய சர்வதேச தொடர்களில் அவரது கோல் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    2018 ரஷ்யா உலகக்கோப்பையில் 6 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்ற ஹாரி கேன், 2022 கத்தார் உலகக்கோப்பையில் 2 கோல்கள் அடித்தாலும், காலிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக முக்கியமான பெனால்டியை தவறவிட்டதால் இங்கிலாந்து வெளியேறியது.

    உலகக்கோப்பை வரலாற்றில் 11 கோல்கள் அடித்துள்ள ஹாரி கேன், ஜெர்மனியின் யுர்கன் கிளின்ஸ்மேன் மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோசிஸ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

    நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 3 கோல்கள் அடித்துள்ள ஹாரி கேன், 5 கோல்களுடன் முன்னிலையில் உள்ள லியோனல் மெஸ்ஸியை தொடர்ந்து கோல்டன் பூட் விருதுக்கான போட்டியில் நீடித்து வருகிறார். மேலும் கிலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட், ஒஸ்மான் டெம்பிலே, வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் தலா 4 கோல்களுடன் முன்னிலையில் உள்ளனர்.

    கிளப் மற்றும் தேசிய அணிக்காக இந்த சீசனில் மொத்தம் 70 கோல்கள் அடித்துள்ள ஹாரி கேன், அபாரமான ஃபார்முடன் நாக் அவுட் சுற்றை எதிர்கொள்கிறார்.

    england England Captain England Football FIFA World Cup 2026 Harry Kane
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா அப்டேட் : ஒரு கோல் கூட அடிக்க முடியாத போர்ச்சுகல் – கொலாம்பியா..! ஏமாற்றிய ரொனால்டோ..!
    Next Article கபாடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை – மக்கள் நீதி மய்யம் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    June 28, 2026

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    June 28, 2026

    திருப்பூர் : அமைச்சர் வருகையில் தாமதம்..! சொட்டு மருந்து முகாமில் பச்சிளம் குழந்தைகளோடு காத்திருந்த தாய்மார்கள்..!

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

    திருப்பூர் : அமைச்சர் வருகையில் தாமதம்..! சொட்டு மருந்து முகாமில் பச்சிளம் குழந்தைகளோடு காத்திருந்த தாய்மார்கள்..!

    ஐடி கார்டுகளில் ஜாதி சான்றிதழ் இல்லை..! பொய்யான தகவல்கள் பரபரப்படுகிறது..! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.