Close Menu
    What's Hot

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!

    முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!

    13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!
    Featured

    முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!

    Editor web1By Editor web1June 28, 2026Updated:June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு நடைப்பெற உள்ளது.

    முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலும் இருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, நாளை (ஜூன் 29) மற்றும் நாளை மறுதினம் (ஜூன் 30) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

    நாளை (ஜூன் 29) காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதில், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் விஜய் தனியாக ஆலோசனை நடத்துகிறார். இதில், 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றிக் தமிழகம்”தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    ஜூன் 30 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து IFS அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது, மனித–விலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இறுதியாக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பரிசு வழங்கி சிறப்பிக்க உள்ளார். தவெக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முதல் முறை கூடும் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    #CMVijay #IAS #IPS #IFS #TNGovt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
    Next Article சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!
    Editor web1
    • Website

    Related Posts

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!

    June 28, 2026

    13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

    June 28, 2026

    தங்கம் வாங்குவதை தவிர்த்த மக்களுக்கு நன்றி! – பிரதமர் மோடி

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம்!

    முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு!

    13 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

    தங்கம் வாங்குவதை தவிர்த்த மக்களுக்கு நன்றி! – பிரதமர் மோடி

    இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இந்தியா- செஷல்ஸ் ஒரே புள்ளியில் இணைகிறது! பிரதமர் மோடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.