Close Menu
    What's Hot

    ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி

    மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்  உருவாகும் ” திருக்குறள் 2 ” –  இன்று பூஜையுடன் படப்பிடிப்பு
    சினிமா

    தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்  உருவாகும் ” திருக்குறள் 2 ” –  இன்று பூஜையுடன் படப்பிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 thirukural b
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் மற்றும் ஆஙில மொழிகளில் உருவாகும் திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக இன்று துவங்கியது!

    ஆங்கில மொழியில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது திருக்குறள் -2

    011 thirukural A

    காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

    பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம்  தயாராகிறது.

    ஆங்கிலத்தில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது.

    திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர்.

    011 thirukural

    VIT வேந்தரும், தமிழியக்கம் தலைவருமான DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார்.

    திருக்குறள் முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

    அருட்தந்தை G.U.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான் உலகக் கவனம் பெற்றது நம் குறள்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், ரோம் கிரேக்கம் போன்ற மேற்குலக நாடுகளுடனும், சைனா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். 

    இப்படத்தில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மேலும் பல ஆளுமைகள், கலாச்சாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்ககால பண்பட்ட நாகரீகம் படமாக்கப்பட உள்ளது என இயக்குனர் A. J. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    011 thirukural c

    சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் HOLLYWOOD கலைஞர்களின் பங்களிப்பும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளது எனவும்,  

    பெருமை வாய்ந்த நமது தமிழ் பண்பாட்டை திருக்குறள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே இப்படத்தின் நோக்கமாகும் எனவும் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

    இத்திரைப்படத்தை தொழிலதிபர் V.G.சந்தோஷம்  கிளாப் போர்டு அடித்தும், T. P. ராஜேந்திரன் கேமராவை இயக்கியும் படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅயர்லாந்து தொடரில் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?. பயிற்சியாளர் விளக்கம்!.
    Next Article விம்பிள்டனின் ‘மிகவும் அழகிய வீராங்கனை’!. இந்த ஆண்டு விளையாடாதது ஏன்?
    Editor TN Talks

    Related Posts

    ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி

    June 29, 2026

    மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!

    June 29, 2026

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி

    மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!

    ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.