Close Menu
    What's Hot

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி
    Featured

    ஈத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026Updated:June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 iran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி தெரிவித்துள்ளார்.

    ஈரானிய வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா–ஈரான் இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பிராந்திய ஒத்துழைப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடிக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தியக் குடியரசின் மதிப்பிற்குரிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே, புனித ஈத் அல்-அத்ஹா பண்டிகையை முன்னிட்டு தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை பெற்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “தங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் உருவான நமது இரு நாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு, இரு அரசுகளின் முயற்சியால் மேலும் வலுப்பெற்று விரிவடையும் என்று நம்புகிறேன். இந்திய அரசும், இந்திய மக்களும் தொடர்ந்து வளமும் வெற்றியும் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

    மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேரடியாக அனுப்பிய முதல் அதிகாரப்பூர்வ தகவல் இதுவாக கருதப்படுகிறது.

    அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு பிறகு, புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இதுவரை பொதுமக்கள் முன் தோன்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கு மற்றும் அடக்க நிகழ்வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார்.

    86 வயதான அலி கமேனி, பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்று வரும் உயர்மட்ட தூதரக தொடர்புகளில் இந்த வாழ்த்து பரிமாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Eid Greetings Iran Mojtaba Khamenei Narendra Modi pm modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!
    Next Article சொத்து முடக்கம் நீக்கம் எதிர்த்து அமலாக்கத் துறை மனு ; அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளிக்க உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    June 29, 2026

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    June 29, 2026

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    ”அப்பாவுக்கு மரியாதை… அம்மாவிடம் ஆறுதல்…” –   விஜய் குறித்து சாந்தனு நெகிழ்ச்சி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.